Friday, January 26, 2007

Dreading Brain

என் மூளையின் அச்சம்...

பிரச்சனைகள் சுற்றிலும் பலப்பல
வேற்று மொழி அறிவது முதல் இரக்கும் சிறுவனுக்கு உதவுவது வரை.
கற்பதற்க்கும் விஷயங்கள் பலப்பல.
தொடர்வண்டியின் சிக்னல் நுட்பம் முதல் இயற்கையின் மரபியல் விந்தைகள் வரை.
அனுபவித்துத் தான் கற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
ஆனால் எதை கிரகிக்க, எதை விட என்ற குழப்பம் நிறைய.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு தகவலைத் திணிப்பது போல்,
தகவல் மிகுதியால் தாமச குணம் கொள்ளும் கணிணியாக,
பெருங்குவியலில் கடிதம் கண்டெடுக்கும் கதையாய் -
தகவல் கிரகித்தால் தானும் நிறைந்த கணிணியைப் போல் ஆகுமோ என்ற அச்சத்தில்
அறிவை கூட்டத்தயங்கும் அறிவிலியின் மூளை!


15 ஜூலை 2004, 16:35 மணி, மன்மாட் இரயில் நிலையம், மத்தியப் பிரதேசம்.