Sunday, February 18, 2007

Some haiku poems...

சில ஹைக்கூகள். (ம்ம்ம்.. ஹைக்கூ மாதிரின்னு வெச்சிக்குங்களேன்...)


மறக்க முடியுமா ! – அவளைப் நான் பார்த்துவிட்டேன்
என்பதற்காக அவளும் என்னைப் பார்த்ததை...

(அவள்: பர்தா போட்ட இளம் பெண்)



வீடு திரும்பும் தளர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கையில்
என்னை அறியாமல் பின்தொடரத் துவங்கியிருந்தேன்.
பாதைக்கு புதியவள் போலும், பார்வையில் வெப்பம்
தேக்கி அவள் உமிழ, பெற்ற எனது கண்கள்
தாளாது திரும்பின. மனமும் கோபத்தின்
காரணம் புரியாது தவித்தது.



அறிவியல் கூடத்தில் ‘ஒரு நிமிஷம் கொடேன்’
என்று கொடுக்கப்பட்டு அறியாமலே தொலைந்த
பொருட்கள் எத்தனை எத்தனையோ...
ஆனால் இன்றோ, கேட்காமலே நான் தொலைந்தேன் அவளிடம் !!


(2000)