Saturday, December 1, 2007

பணக்கோழைகள் மட்டுமே உன்னோடு!

பல கோடி ரூபாய் முதலீட்டுக்கு,
இலாபம் பார்க்காமலா விடுவாய்?
பல்லாயிரம் உழவர்களின் வியர்வையை உறிஞ்சாமலா விடுவாய்?
விதை நெல்லின் வியாபாரம் பொன் முட்டையிடும் வாத்தல்லவா?

அமெரிக்காவை வளைத்தாயிற்று, ஐரோப்பாவில் வழியில்லை,
ஆசியாவில் எமாளிக்கென்ன பஞ்சமா?

உனது சாவிக்கு மட்டும் திறக்கும் சட்டப்பூட்டு இங்கு தானே உள்ளது.
ஊருக்கு சட்டம் அது உனக்கு லைசென்சு.

கையூட்டு வாங்கா அதிகாரியை கேள்விப்படாத நாடு எங்களது.

தகவல் உரிமைச் சட்டம் அது உனக்கு எதிர்பாராத சிக்கல்.
அதற்கு உன்னிடம் சாவி இல்லாது போனது எங்கள் பாக்கியம்.

ஏதோ சில நாள் உன்னை தடுப்பது அதில் எங்களுக்குத் தான் சிறு வீரம்.
மீண்டும் உனது பூட்டுகளுக்குள் வந்தடையும் சில நாட்களில்.

சிக்கல் தீர்ந்தது உனக்கு, சாவுமணியின் ஒலி எனக்கு.

சாவின் வீரம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. கொன்று பழக்கப்பட்டவன் நீ.
மரணத்தின் முனையே வீரத்தின் பிறப்பிடம்.

போராளிகள் உண்டு எங்களோடு- பணக்கோழைகள் மட்டுமே உன்னோடு.



வெற்றி யாரிடம் பார்ப்போம்.

No comments: