கைப்பை...
ஏதோ தெரியாமல் தான் கேட்டுவிட்டேன்,
அடடா, ஒரு கைப்பையில் தான் எத்தனை விஷயங்கள்
பணம் ஒருபுறம் கிடக்க, இறைபடங்கள் ஒரமாய் இருக்க,
மூலைமுடுக்கில் நைந்து போன ஒரு காகிதம்.
அதிகவனத்துடன் பிரித்து பார்த்தால்,
காலத்தின் போக்கில் ஒளியிழந்த எழுத்துக்கள்.
கூட்டி கூட்டிப் படித்ததில் ஒன்று மட்டும் புரிந்தது
எல்லோர் வாழ்க்கையிலும் காதல் இருக்கத் தான் செய்கிறது...
2003.
Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts
Subscribe to:
Posts (Atom)