Showing posts with label tambaram. Show all posts
Showing posts with label tambaram. Show all posts

Friday, January 26, 2007

The eyes meet




விழிகள் இணைய...

மூச்சை இறுக்கும் கூட்டம்- அதனிடையே
எனது விழிகளில் விழுந்த ஒளி- அது ஒரு
பெண்ணுடையிலிருந்து தெறித்த காரணத்தால்
முகத்தை காணும் ஆவல் எழும்பி- அதற்காக
கால் மிதிபட்டு, கை நசுங்கி, கூட்டத்தில் பையும் சிக்கி
மேலிருக்கும் பிடி பிடித்து, சர்க்கஸ் வேலைகள் செய்து
அவளை நான் பார்க்கும் போது – அவளும் எனைப் பார்க்க...

இறைவா! அது ஒரு நொடியேனும் நான் ஜென்ம சாபல்யமடைந்தேன்!

2000, தாம்பரம் செல்லும் மாநகர இரயிலில்.
படம்: S V Sriram, 2001. http://www.irfca.org/gallery/EMU/mg_emu_crowd.jpg.html
என்ன செய்ய? மூச்சை இறுக்கும் கூட்டத்தில் படம் எடுத்தால் மூழுசாக வெளியே வரமுடியுமா என்ன?

Broad gauge Platform

பிராட்கேஜ் பிளாட்பாரம்

அந்த பிளாட்பாரத்தில் நடந்த அனைவரும் தொலைந்தவர்கள்.
தொலைந்ததை தேடப் போய் தொலைந்து போனவர்கள்.
நெடிய அந்த பிளாட்பாரத்தில் நடக்கும் போது
எதோ வாழ்க்கையில் வாழ்வது போன்ற உணர்வு.
தொலைவில் எரியும் சிகப்பு விளக்கு - அதை
எல்லையாக எண்ணி நோக்கி நடக்கின்றேன்.
இதோ இதோ என்று ஆசையைத் தூண்டுகின்றது.
நடக்க நடக்க தொலைவு காணாமல் போய்க்கொண்டிருந்தது
சிகப்பும் நெருங்கிக் கொண்டேயிருந்தது
வாழ்கையைப் போன்றே.
ஆனால் இவ்வாழ்க்கையில் தான் காலத்தை நிறுத்த முடியும்
நிஜவாழ்கையில் முடியதே!
ஒரு வழியாக சிகப்பை அடைந்தேன்.
எல்லையை தொட்டுவிட்ட ஆனந்தத்துடன்,
ஒரு உண்மையை உணர்தேன்.
பிளாட்பாரத்திற்கு முடிவுண்டு,
தண்டவாளத்திற்கு இல்லையென்று.


2000, பிராட்கேஜ் பிளாட்பாரம், தாம்பரம்.