Saturday, September 1, 2007

மறுபடியும் அதே பிரச்சனை...

மறுபடியும் அதே பிரச்சனை. மனதை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை.

சமயம்: ஒரு வேலை குறைந்த- காலக்கெடு இல்லாத, அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் ஒன்றை செய்து முடிக்காவிட்டால், இரண்டு மணி நேரத்தில் பிரளையம் நடந்து விடக்கூடிய எந்த ஆபத்தும் அற்ற ஒரு ஞாயிறு. ( பொதுவாக சனியும் இப்படித்தான் இருந்தது, ஆனல் நான் தான் சனியை வாரநாட்களில் சேர்த்துவிட்டேன்).

குறுக்குச் சிந்தனை: (side thinking) இந்த இரண்டு நிமிஷம், இரண்டு மணி நேரம், பிரளையம் பேரிடர், என்பதல்லாம் இயற்கையோடு போராடுவது போல் இருக்ககிறது இல்லையா? அப்படியெனில் ஞாயிறு விடுமுறை என்பது இயற்கைக்கு எப்படி தெரிந்தோ?

சரி, பிரச்சனைக்கு வருவோம். எனக்குத் தெரிந்த வரையில் எளிய வழியில் விளக்க முயற்சிக்கிறேன்.

செய்வது ஊருக்கு வேலை.
அல்லது இயற்கைக்கு – ஆனால் இயற்கை வாழ்வதனால் மனித இனம் சிறப்பாக வாழும் மற்றதும் உயிரோடு இருக்கும் என்பது இலக்கு. ஊருக்கு கெடுதல் வருவது மனிதனல் தான்- மனிதன் என்றால், அரசு, அதிகாரிகள், தொழிலில் பணம் பண்ணி என்னவோ செவ்வாயில் நிலம் வாங்க வேண்டும் என்பது போல், எவ்வுளவு சம்பாதித்தாலும் அடிப்படைக்கே இல்லாமல் போகுது- அதனால் இன்னும் இன்னும் என்கிற மாதிரி எண்ணம் கொண்ட ‘தொழிலதிபர்கள்’. என்ன வளர்ச்சி பெற்றாலும் வளர்ச்சி விகிதம் குறையாமல் இருக்க என்னவானலும் செய்யலாம் என்பது போன்ற பொருளாதாரக் கொள்கை. மக்கள்தொகை பெருக்கத்தின் விகிதம் மட்டும் தான் குறையனும் மத்ததெல்லாம் ஏறனும் – இந்த அத்தனையும் சேர்ந்துக்கொண்டு சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் பொல்லாத எமனாக இருக்கின்றன.


இந்த ஒரு இலட்சத்து அறுபத்தாறாயிறத்து ஐந்நூற்றி எழுப்பத்தி நான்கு பேரிடர்க்கு வழிவகுக்கக் கூடிய பிரச்சினைகளில் நான் ஓரே ஒரு பிரச்சச்னைக்கு... முடிவெல்லாம் இல்லை- குறைந்த பட்சம், அனைவருக்கும் தெரியப்படுத்தவாது நினைக்கிறேன். நான் மட்டும் இல்லை, என்னுடன் பணிபுரியும் இருவரும், பல அமைப்புகளும் அதில் பல மக்களும் இருக்கின்றார்கள். அந்த அமைப்பகளிளும் சரி, இந்த 1,64,574 பிரச்சனைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வேலை செய்து வருகிறோம்.

எங்களுக்குள் வேறு பிரச்சசனைகளும் இருக்கின்றன. நாங்களும் மனிதர்கள் என்பதால், அரசு, அதிகாரிகள், தொழில் பணப் பிசாசுகள் போன்றவறகளின் மாதிரிகள் எங்களுக்குள்ளும் உண்டு. உண்மையில் எங்களுக்கும் அவர்களுக்கும் சமயங்களில் ஆள் பரிமாற்றம் கூட நடப்பது உண்டு, அவ்வள்வு ஒற்றுமை, ஆனால் நோக்கங்கள் தான் வேறு. ஆக இவ்வளவு ஆட்கள் இருந்தும், எனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கின்றீர்களா?

நான் என் பணியைச் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் அன்று என்னால் யுகிக்க முடியவில்லை. பேரிடர் நிகழும் என்று சத்தியமாக நினைக்க முடியவில்லை. நீ உன் கடமையைச் செய்துகொண்டேயிரு. அது ஆக்கபூர்வமா என்று மட்டும் பார் என்று சொல்கின்றீர்களா? அங்கும் ஒரு பிரச்சனை. நான் ஆக்கபூர்வமாய் படகின் உள்ளிருக்கும் நீரை ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து கடலில் ஊற்றிக்கொண்டிருக்க மறுபுறம் ஒருவன் வாளியால் கடல் நீரை படகினுள் ஊற்றுவதை தடுக்காது உன் கடமையைச் மட்டும் செய்யென்றால்- மன்னிக்க என்னால் முடியாது! இந்த ஆக்கம் அழிவு விகிதம் சமன்பாட்டிற்குள் சிக்க மாட்டேன் என்கிறது.

வீடு இல்லை, வாசல் இல்லை, அசையும் சொத்து ஒன்றிறண்டு இருக்கிறது, குடும்பம் இல்லை, மனைவி இல்லை, காதலியும் இல்லை, காதலும் இல்லை என்ற கட்டத்தில் நான் இருக்க, ஒரே உறவு, காரணம், வாழ்வின் பொருள் எல்லாம் எனது பணியாக இருக்க, இந்த கோணத்தில் பிரச்சினையின் கொள்ளளவினை அளந்து பாருங்கள்- என்னிலை புரியும்.

பாலில்லா குளம்பியின் தெம்போடு,


பசுமைசெய்.

No comments: